உன்னால் முடியுமா தம்பி ?

“ஹாய் பாஸ், எப்படி இருக்கீங்க ?” 

 “என்னடா….நக்கலா ? பாஸ் , அது இதுன்னு…!”

 “முதலாளி ஆயிட்டீங்க……..பழையபடி வாடா போடான்னு கூப்பிட முடியுமா, என்ன ?” 

 “ஏன் முடியாது ? நீ எப்பவுமே எனக்கு அன்பான நண்பன் தானே ?”

 “அது சரிடா, என்ன ப்ராசஸ் போயிட்டு இருக்கு , வியாபாரம் எப்படி இருக்கு ?” 

 “ ம்ம்ம்ம்…..பரவால்லடா………….. ?”

 “என்ன சுதி குறையுது ?” 

“சுதி குறையலை….கதி என்னாகுமோன்னுதான் பயமா இருக்கு ?”

 “என்ன புதுசா பயம்ன்னு பெரியா வார்த்தைல்லாம் ?”

 “கம்பெனிக்கு புதுசா ஒரு சாப்ட்வேர் வாங்கனும், கொஞ்சம் பட்ஜெட் பெருசு?” 

“கண்டிப்பா தேவையான சாப்ட்வேரா ?” 

“ ஆமா, கார்மெண்ட் பண்ணவேண்டிய துணிகளின் கன்சம்ப்சன், காஸ்டிங், புரொக்கிராமிங் போட கொஞ்சம் சுளுவா இருக்குமாம் ?”

 “அப்புறம் என்ன, வாங்கித்தானே ஆகனும் ?”
“ கரெக்ட் தான், வாங்கி அதை முழுசா யுடிலைஸ் பண்ண முடியுமா, யூஸ் பண்ண சவுகரியமா இருக்குமான்னுதான் பல(த்த)யோசனை ?” 

“ சரி……இப்ப என்ன அளவுக்கு பிசினஸ் பண்றே ?”

 “ அதாவ்து……………..?”

 “அதாவ்து என்ன டார்கெட் வச்சு பிசினஸ் பண்றே ?”

 “ லோக்கல் பிசினஸ் மாசம் 30 லட்ச ரூபா ஆகுது, டார்கெட் 50….. ?” 

“அப்புறம்?”

 “அப்புறம், ஸ்கூல் ஆர்டர், யூனிஃபார்ம் ஆர்டர்லாம் சேர்த்தால், அது ஒரு 5 லட்சம் வந்திரும், இதுக்கு டார்கெட் 10 லட்சம் ?”

 “மொத்தம் 35 லட்சம் ஆச்சி ?” “கிட்டத்தட்ட….?”

 “அப்புறமென்ன யோசனை, சாப்ட்வேர் போட்டிற வேண்டியது தானே?” 

“ அதெப்படி குத்து மதிப்பா போட முடியும்?”

 “ குத்து மதிப்பெல்லாம் இல்ல…..கணக்கு போட்டுத்தான் சொல்றேன்?” 

“அப்படி என்ன கணக்கு உன்னுது?” 

“சிம்பிள், மாசம் 35 லட்சம்னா, வருசம் நாலு கோடியே 20 லட்சம், சரியா ?”

 “ கணக்கு சரிதான் , மேல சொல்லு ?”

 “பொறு…பொறு……வருசம் நாலு கோடியே இருபது லட்சத்துல உனக்கு மினிமம் 15% பிராஃபிட் அப்படின்னால்………..?” 

“63 லட்சம் லாபம் கிடைக்கும்…..”

 “ கிடைக்குமில்ல ?” 

“கிடைக்கும்….., பேப்பரில் மட்டும்”

 “வரேன், வரேன்……..அதுல ஓவர் ஹெட் செலவு பாதிய கழி ?”

 “63 லட்சத்தில், பாதி முப்பத்தி ஒரு லட்சத்தி, ஐம்பதாயிரம்….கழிச்சாச்சி ” 

“கரெக்ட்…….அதாவ்து உன் வருட வருமானம், முப்பத்தி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம், லாபமாக….கரெக்ட் தானே ?”

 “ ஆமா……?” “அதாவது உன் சம்பள்ம் இல்லாமல்….இந்த லாபம் ?”

 “சரிதான் ,என் சம்பளம்னு ஒரு செலவை நான் மாசாமாசம் கணக்கு எழுதி எடுத்துக்குவேன்”

 “அதாவ்து இந்த முப்பத்தி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் என்பது உன் நிகர லாபம்…..அதாவ்து Take Home Profit? ” 

“பெர்பெக்ட்?”

 “இப்போ சொல்லு, நீ வாங்க நினைக்கும் சாஃப்ட்வேர் என்ன விலை? ”

 “ கிட்டத்தட்ட நாலரை லட்சம்… ?”

 “அதை இன்ஸ்டால் பண்ணி, அப்டேட் பண்ணி, வொர்க்கிங் கண்டிஷன்க்கு கொண்டு வர இன்னொரு அம்பதாயிரம்னு வச்சிக்க….மொத்தம் அஞ்சு லட்சம் செலவு…..அதானெ? ”

 “ஆமாப்பா….”

 “இந்த சாஃப்ட்வேர் ஒரு அஞ்சு வருசம் உழைக்குமா .?”

 “கண்டிப்பா ! அப்பப்ப அப்டேட் பண்ணனும், அவ்ளோதான்”

 “ சரி…..….அப்போ இதன் வொர்த் வருசம் ஒரு லட்சம், அதானே ?”

 “ஆமா….”

 “இது கம்பெனியோட அஸெட்டா மாறிடும்….”

 “ஆமா….அதும் சரிதான்….”

 “இந்த சாஃப்ட்வேர் வந்தால், உன் பிஸினசில் புரோக்கிராம், காஸ்டிங், கன்சம்ப்சன் இதல்லாம் பெட்டரா பண்ணலாம்னு நினைக்கிறே, அதானே ?….” 

“ஆமாப்பா, ஆமாம்….”

 “வருசம் ஒரு லட்சம் செலவு பண்ணி, மாசம் பத்தாயிரம் மிச்சம் பண்ண முடியாதா என்னா?.”

 “அதெல்லாம்……….அதுக்கு மேலயே பண்ணிட முடியும், ஒரு ஆள் சம்பளமே குறைஞ்சிடும். மாசம் பதினெட்டுலேர்ந்து இருபதாயிரம் குறையும்”

 “இப்ப இந்த சாஃப்ட்வேரை வாங்குவது வொர்த்தா இல்லையா…அதாவது வருஷம் ரெண்டு லட்சம் மிச்சம்.”

 “அட, வொர்த்தாம்ப்பா ”

 “இப்போ சொல்லு, நான் குத்து மதிப்பா பேசறேனான்னு….” 

“இல்லப்பா….கரெக்டா கால்குலேட் பண்ணித்தான் பேசறே ”

 “ கரெக்டா கால்குலேட் பண்ணி பேசறதை விட, முடியுமா முடியாதான்னு யோசிக்கனும். அதைவிட முக்கியம், முடியாதுன்னு மனம் சலிப்பதை விட, ஏன் முடியாதுன்னு யோசிச்சு, முடியும்னு முடிவு எடுக்கனும். அதான் நான் செஞ்சது !

 “ பரவால்லியே , நல்லாத்தான் யோசிக்கரேயே……நீ என் கூடவே இருந்துடேன் !”

 “ நான் எப்படி எல்லார் கூடயும் இருக்க முடியும், அதுக்கு பதிலா இந்தா இதை வச்சுக்க…”

 “ என்ன இது ?”
“ நம்ம உலகப் பொது மறை வள்ளுவம். இதிலதான் இருக்கு, நான் சொன்ன கருத்து..”

 “ எப்படி பிசினஸ் பண்ணனும், சாஃப்ட்வேர் வாங்குனுமா வேணாமான்ணு கூடவா வள்ளுவர் சொல்லிருக்கார்?” 

” அவர் ‘டச்’ பண்ணாத சப்ஜெக்ட் இருக்கா என்ன ? ‘ நோபடி இஸ் ஜேக் ஆஃப் ஆல்’ (Nobody is Jack of all - அதாவது முற்றும் அறிந்தவர் இல்லை ) அப்படிம்பாங்க, ஆனா நம்ம வள்ளுவர் ஒரு ஜேக் ஆஃப் ஆல்ல் தான், தெரியுமா ?”

 “ நன்றிப்பா, இந்த புத்தகத்தை நான் வச்சுக்கரேன், நீயும் அப்பப்போ வந்து உனக்கு புடிச்ச குறள் பற்றி பேசிட்டு போ… “ 

“ கண்டிப்பா மாசா மாசம் வரேன், நம்ம் ஏடிட்டர் ஒத்துக்கிட்டாங்கன்னா…. ஹாஹாஹா”
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். (குறள் 611: பொருட்பால்) 

விளக்கம் 1: இது செய்வதற்கு ஆகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்ததற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும். – மு.வ 
விளக்கம் 

விளக்கம் 2 : நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும் – கலைஞர் விளக்கம்

Comments

Popular Posts