அக்கினி நட்சத்திரம்
எல்லா தேர்தலுமே போராட்டம்தான். ஆனால் இந்த தேர்தல் மட்டும் தான் போட்டி அதிகம் எனும் புலம்பல் மாதிரி, ‘உஷ்…அப்பாடா, இந்த வருஷம்தான் எப்பயும் விட வெய்யில் ஓவர்’ என்கிற பினாத்தல்கள் நம்ம காதில் கேட்க ஆரம்பித்துவிட்டது. இன்ஃபாக்ட் நமக்கும் அப்படி புலம்பனும் போலத்தானே தோன்றுகிறது ? காரணம் இதோ பக்கத்தில் அக்னி நட்சத்திர ம் . அக்னி நட்சத்திரமானது வருகிற சித்திரை மாதம் 21 ஆம் நாள் (04.05.26) திங்கட்கிழமையில் தொடங்கி வைகாசி 14 வரை( 28.05.26) வியாழக்கிழமை வரை நீடிக்கிற தாம் . அ.ந. வானது வழமையாக 15 நாட்கள் உக்கிரமாக இருக்கும். ஆனால் இது 21 நாள் சமாச்சாரம், இந்த முறை 25 நாட்களுக்கு நீடிக்கிறது . நமது பஞ்சாங்கத்தில் இந்த தேதிகள் சரியாக கணிக்கப்பட்டு சொல்லப் பட்டுள்ளது. கதைகேட்டு வளர்ந்த நமக்கு, இதற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும் என்று தெரியாதா என்ன ? முன்னொரு காலத்தில் சுவேதகி என்ற மன்னன் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி யாகம் செய்தான். ( எங்கடா கிடைச்சுது அவ்ளோ நெய் ? திருப்பதில நல்ல நெய்க்கு தட்டுப்பாடாம்) ஊத்துன நெய் யை சாப்ட்டு அக்னி தேவ...





