சிவாஜி vs எம்.ஜி.ஆர்


“ஒருவனுக்கு சாப்பிட மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்” எனும் பிரபலமான அட்வைஸ் அனைவரும் அறிந்திருக்கக் கூடியதே. ஆனால் இன்னும் நமது சமுதாயத்தில், அன்னதானச் சத்திரங்களுக்கு இருக்கும் மரியாதை- அவசர உதவிக்கு வரும் 108 க்கு இல்லை.
இலவசங்களுக்கு இருக்கும் வரவேற்பு, தொழில்முனைவோர் பயிற்சி அமைப்புகளுக்கு இல்லை. அண்மையில் தனது கருத்துக்கு வலு ஏற்றும் வகையில், ஒரு ந்ண்பர் ஒரு எடுத்துக் கட்டினைச் சொன்னார். மக்களிடம் பெரும் புகழ் பெற்றிருந்த மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் வீட்டுக்கு விழா ஒன்றிற்காக அழைக்கச் சென்றிருந்த பொழுது, முதலில் சாப்பிட வைத்து, பின்னர் அந்த நாளில் வேறொரு விழாவுக்கு செல்ல இருப்பதால் வர இயலாதென மறுத்ததை சொல்லி, ‘யாருக்கும் கொடுத்தே பழக்கப் பட்டவர் எம்.ஜி.ஆர்’.
ஆனால் அவரின் போட்டியாளரான திரு சிவாஜி அதற்கு நேர்மறை. ‘வந்தால் கொடுப்பது’ என்பது இவர் பாலிசி எனவும் , மக்களிடம் யாருக்கு புகழ் அதிகம் யோசியுங்கள் என கேட்டார்.
பசித்தவனுக்கு சோறிடுவது தவறில்லைதான். ஆனால் பசியே வராமல் தடுப்பது? பேட்டி ஒன்றுக்கு மானகரப்பேருந்தில் தாமதமாக வந்ததை கண்டித்து ஒரு (குமுதம்?)நிருபருக்கு ‘பைக்’ வாங்கிக் கொடுத்து ‘இனி மேல் லேட்டா வேலைக்கு போகாதே’ என அட்வைஸ். ‘உடம்பு முடியலை, வயசாயிடுச்சு. இனிமேல் வேலை பாக்க முடியாது’ என தோட்டத்தில் விடுப்பு கேட்டவருக்கு சென்னை சாந்தி தியேட்டரில் கேண்டீன் காண்ட்ராக்ட் கொடுத்து உக்கார்ந்து சம்பாதிக்க வழி.
இப்படி எல்லா வழிகளிலும் வாழ வழி தந்து உதவி ‘வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது’ என உண்மையிலேயே ‘கர்ணன்’ என வாழ்ந்து மறைந்தவர் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’ அவர்கள்.
‘இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்-இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’ எனும் கருந்துக்கிணங்க, அவர் மறைந்த பின்னாலும் அவர் பெயரை சூப்பர் ஸ்டார், உலகனாயகன், இயக்குனர் பி.வாசு, நிருபர் மேஜர்தாசன், னடிகர் சின்னிஜெயந்த், ராஜேஷ், நாடகவியலாளர் Y.G.மஹேந்திரன், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், தொழிலதிபர் சிதம்பரம், என இன்னும் தொடர்வோர் ,சோறு போட்டதாலா சம்பாரிக்கக் கற்றுக் கொடுத்ததாலா?

Comments

இதுவரை தெரியாத இரண்டு நியூஸ் சொல்லியிருக்கிறீர்கள். ந வரவேண்டிய இடத்தில் எல்லாம் ன வந்திருக்கிறதே! எம் ஜி ஆரைப் பற்றிச் சொல்லும்போது வீட்டில் உலை கொதிக்க வைத்து விட்டு ஒருவரிடம் சென்று உதவி கேட்கலாம் என்றால் அது எம் ஜி ஆர் தான் என்று என் எஸ் கே கூட சொல்லியிருப்பதாகப் படித்திருக்கிறேன். போட்டி போட்டு உதவி செய்திருந்தால் சரிதான். இல்லையா? :)))

Popular Posts