சகுனியின் சூது கவ்வும்
குருஷேத்ரத்தின் பதினெட்டாம் நாள் போரில் சகாதேவனால்
கொல்லப்பட்டவர் இந்த கட்டுரையின் நாயகன் சகுனி.
மகாபாரதத்தின் மிகமுக்கிய மகாபாரத கதாபாத்திரங்களில்
ஒன்பதாவதாக ஒப்புக்கொள்ளப்பட்டவர்.
இங்கே தாயம் உருட்டுவதில் சாயம் மாறாத சகுனியை
சந்திக்கலாம்.....அவரிடமிருந்தும் ஏதேனும் கற்றுக்கொள்ளலாம்.
சகுனியின் குணம் வெறுப்படையத்தக்கதே என்று பலர் எண்னினாலும்
அவரிடமும் பொறுப்பான ஒன்று இருக்குமல்லவா? அதை தேடுவோம்.
ராமாயண ராவணன் கூட சிவபக்தன் என்கிற சிந்தையாளன்தானே? (அப்படியே நமது சகுனியும் சிறந்த சிவபக்தன் என்பது இங்கே கூடுதல் செய்தி)
எல்லாச் சேற்றிலும் ஒரு செந்தாமரை மலர்ந்து கிடக்கிற அழகு இருக்கத்தானே செய்கிறது?
சகுனிக்கு எப்போதும் தனது சகோதரி காந்தாரியிடம் மகிழ்வான உறவு கிடையாது. காந்தாரி கௌரவ திரிதராஷ்டிரரை மணந்த்வள்.
குருஷேத்ரத்தின் முக்கிய புள்ளியாக எப்படி கிருஷ்ணன் இருந்தாரோ அப்படி சகுனியும் அந்தப் போரின் முக்கிய பாத்திரமே.
சகுனியின் தந்தை சுபலன். அவர் பழிவாங்க வேண்டியதன் அடையாளம்
ஒன்றை சகுனியின் உடம்பில் ஏற்படுத்தினார். சகுனியின் கணுக்காலை உடைத்தார்.
சகுனியிடம் சொன்னார். “இந்த ஊனம் உனக்கு எங்களின் இறப்பை ஞாபகப்படுத்தும். உன்
கடமையை ஞாபகப்படுத்தும். கௌரவர்கள் உன் எதிரிகள்”
தனது தந்தையின் ஆசைப்படி அவரது உடம்பின் எழும்பு பாகங்களால்
செய்யப்பட்ட தாயக்கட்டையைத்தான் சகுனி எப்போது பயன்படுத்தி வந்தார். சொன்ன எண்
விழுவதற்கு அதுவும் ஒரு காரணம்.
அந்த மந்திர எண்கள் விழக்காரணம் அவர் தன் இளமையில் அனுபதித்த துன்பங்களே எனலாம்.
பீஷ்மரின் தலைமையில் காந்தார நாட்டை முற்றுகையிட்ட ஹஸ்தினாபுரத்தின் படை அங்கிருந்த அத்தனைபேரையும் சிறை பிடித்தது. அதில் சகுனியின் குடும்பத்தார் (அவரின் நூறு சகோதரர்களுடன்) அடக்கம். அவர்களுக்கு சிறையில் தினம் ஒரு அரிசியே உணவாக தரப்பட்டது. நொந்துபோன அவர்கள் அனைவரும் ஒரு முடிவெடுத்தனர். யாரேனும் ஒருவர் மட்டும் அந்த உனவை சாப்பிட்டு உயிர்வாழ்வது எனபதாய்.
அத்தனை பேரும் தேர்ந்தெடுத்தவர் தான் சகுனி. பழிவாங்கும்
குணம் அப்போதே விதைக்கப்பட்டது அவருள். பழிவாங்கும் பொறுப்பும் அவர் தலைமீதே
விழுந்த்து.
உடனிருந்தே பழிவாங்கும் அஸ்திரத்தை எடுத்தாக வேண்டிய
கட்டாயத்தில் சகுனி வளர்ந்தார். கௌரவர்களின் நண்பனாய் தன்னை காட்டிகொண்டே படலத்தை
அரங்கேற்றினான் சகுனி.
பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அவமானப் படுத்தப்பட்ட துரியோதனன் மனமுடைந்து போயிருந்தான், பொறாமை தீயும், தாழ்வு மனப்பான்மையும் அவனுக்குள் நிரம்பி வழிந்தது. துரியோதனனின் மன ஓட்டத்தை அறிந்த சகுனி தனது திட்டத்தை அவனிடம் தெரிவித்தான். அறத்தில் த்ருமரிடம் ஒரு பலவீனமுள்ளது, அவருக்கு சூதாட்டம் மிகவும் விருப்பம். அவரை சூதாட்டத்தற்கு அழையுங்கள், மோசமான ஆட்டம் ஆடுபவராக இருந்தாலும் ஒரு சத்திரியன் சூதாட முடியாது என்று சொல்லமுடியாது. "உனக்குப் பதிலாக நான் ஆடுகிறேன். நான் தாய ஆட்டத்தில் எவ்வளவு கெட்டிக்காரன் என்பது உனக்குத் தெரியும், நான் நினைக்கிறபடி தாயக்கட்டைகளை விழவைக்க முடியும், ஒவ்வொரு வெற்றியுடனும் பாண்டவர்கள் வைத்திருக்கும் எல்லாவற்றையும் உனக்கு பிடுங்கித் தருகிறேன்,
நீ இந்திரப்பிரஸ்தத்தின் மன்னனாக முடிசூட்டிக்கொள், பாண்டவர்கள் பிச்சைக்காரர்களாகி
நிற்பார்கள்". இதற்கு துரியோதனன் இரட்டிப்பு
சந்தோசமடைந்தான், ஆனால் தன் மாமன் குரு வம்சத்தையே அழிக்கப் போகிறான் என்பதை
உணராத துரியோதனன். சூது தொடங்கியது.
ரதங்கள், சேனைகள், யானைகள், குதிரைகள், பணிப்பெண்கள், பணியாட்கள், நாடு என அத்தனையும்
சகுனியால் தருமரிடமிருந்து வெல்லப்பட்ட்து. பின்னர் சகொதர்ர்கள்.மனைவி.
இதில் சகுனியின் கைவன்மையும், வாக்கு வன்மையும் புலப்படும். பேசிய தன் வலையில்
சிக்க வைக்கும் தன்மையே அது.
, மதுராவை மீட்கும்போது கிருஷ்ணனே 17 முறை பின்
வாங்கியுள்ளார். ஆனால் ஆனால் தருமர் ஏற்க மறுத்துவிட்டார். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் போன்றவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டுருந்தனர். "இந்த பைத்தியக்கார ஆட்டத்தை நிறுத்துங்கள்"
என்றார் விதுரன். திருதராஷ்டிரன் கூடாது, தருமர் ஒரு மன்னன் என்பதால் அவரே முடிவு எடுக்க தகுதியுள்ளவர்
என்றார்.
தருமத்தின் வாழ்வைத்தான் சூது
கவ்வியே தீருமே?
கவ்விற்று சகுனியின் தாயத்தால்.
வென்று தந்த சகுனியால் இருமாப்பெய்த
துரியோதனும், துச்சாதனனும் செய்த இழிச்செயல் அப்புறம் நாம் அறிந்ததே.
...........................................................................................................................................................................................
மனம் அது செம்மையானால்...என்கிற வாக்கு நாம் கேட்ட்தே.
சகுனியின் திட்டமிடலும், சொந்த திறமையுமே இங்கு
போற்றத்தக்கது. மனச்செம்மை ஆனால் நன்றும் தீதும் கைவரும் என்லாமோ?
எதிர்னாயகனாய் இருந்தாலும் நமகெல்லாம் பாடம் தரும் புதிர்
நாயகன் சகுனி.
Comments