தர்மராஜா
வானம் தெரியாத அளவுக்கு அடர்ந்த வனம்....
அடர்த்தி தரும் தாகம் அத்தனை பேருக்கும்.

கானகம் சுற்றி கடும் பசியே மிஞ்சிற்று.....உணவுக்கு ஒரு கவளமும் இல்லை. அதில் அவர்கள் கவனமும் இல்லை.
அத்தனை பேரின் பசியை தீர்க்க, அகலா தாகம் அகன்றிருக்க நகுலா என அழைத்து நீர் தேடச் சொன்னார்யுதிர்ஷ்டிரர்......அவரே தர்மம் காத்த தருமர். அத்தனை பேர்க்கும் பெருமர்.
நீர் இருக்கும் சுவடாவது சுற்றியெங்கும் இருக்கிறதாவென மரம் ஒன்றேறி தேடினான் நகுலன்.
தூரத்தில் கேட்டன பறவைகளின் கீச்சுக்கள்.....பசுமையின் பேச்சுக்கள்.
அண்ணன் இட்ட கட்டளையால் அத்தனை பேர்க்கும் நன்னீர் சுனை தேடி நகர்ந்தான் நகுலன்.
முதலில் தன் தாகம் தீர்க்க நீர் அள்ளப் போனவனை தடுத்தது ஒரு குரல்..” இந்தக் குளம் என் வசம்.....எனது கேள்விக்குபதிலிறுத்து பின் உன் தாகம் இறக்கு, இல்லையேல் இதுவே உனக்கு விசம்”
அலட்சியம் செய்து அள்ளிகுடித்தான் தண்ணீரை......உடனே இழந்தான் தன்னுயிரை.
தேடிப்போனவனை தேடி வந்தவர் இப்போது சகாதேவன்.பொய்கையின் கரையில் பொய்யாகி கிடந்தவனை கண்டுகலங்கினார்,உள்ளம் வெதும்பினார்.உண்மை விலம்பினார். தானும் தம் தமையனை உயிர் பிக்க வேண்டி சுனையின்நீர் அள்ளினார். மீண்டும் அசரீரி எச்சரிக்க தமையன் உயிர் காக்க அதை அசட்டையாய் தள்ளினார்.
அவருக்கும் நேர்ந்தது விஷப்பரிட்சை.
இப்படியே அர்ஜுனன்,பீமன் ஆகியோரும் வந்து உணர்சிவசப்பட்டு உயிர் அடங்கினர்.
கடைசியாய் வந்தவர் யுதிர்ஷ்டிரர். தரையில் கிடந்த தமையன்களை மடியில் போட்டு கானகம் அதிர கலங்கினார்.
இப்போது அசரீரி அவருக்கு எதிரே.
யுதிர்ஷ்டிரர் கேட்டார்,”என்ன உன் கேள்விகள்? என்னிடம் கேள்! அத்தனைக்கும் உண்டு என்னிடம் பதில்.”
அசரீரியின் கேள்விகள் தொடங்கின.
“பாத்திரங்களில் பெரியது எது?”
‘எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் பூமியே பெரிய பாத்திரம்.
‘எதனை இழப்பதால் மனிதனுக்கு துன்பம் உண்டாகாது?’
‘கோபம்’
‘பூமியை விட தாங்கும் சக்தி எதற்கு அதிகம்?’
‘தாய்மைக்கு’
‘வீட்டில் இருப்பவனுக்கு தோழன் யார்?’
‘மனைவி’
‘ஆகாயத்தை விட உயர்வானது எது?’
‘பிதா’
‘இறக்கும் தருவாயில் ஒருவனின் நண்பன் யார்?’
‘அவன் செய்த தானம். மரணத்திற்கு பின் தனியாகச் செல்லும் ஒருவனுக்கு அதுவே கூட வரும்’.
‘எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் பூமியே பெரிய பாத்திரம்.
‘எதனை இழப்பதால் மனிதனுக்கு துன்பம் உண்டாகாது?’
‘கோபம்’
‘பூமியை விட தாங்கும் சக்தி எதற்கு அதிகம்?’
‘தாய்மைக்கு’
‘வீட்டில் இருப்பவனுக்கு தோழன் யார்?’
‘மனைவி’
‘ஆகாயத்தை விட உயர்வானது எது?’
‘பிதா’
‘இறக்கும் தருவாயில் ஒருவனின் நண்பன் யார்?’
‘அவன் செய்த தானம். மரணத்திற்கு பின் தனியாகச் செல்லும் ஒருவனுக்கு அதுவே கூட வரும்’.
இப்படியாக அசரீரி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் தர்மம் பிசகாமல் பதில்களால் தானம் செய்தார் யுதிர்ஷ்டிரர்.
“உன் பதில்கள் அத்தனையும் எனக்கு திருப்தியே. உன் தமையன்களில் யாரை தர உயிரோடு எழுப்பியே?”
தயங்காமல் நடுங்காமல் யுதிர்ஷ்டிரர் சொன்னார் “நகுலனை எழுப்பி தா!”
“உனக்கு நான்கு தம்பிகள் இருக்க நகுலனை நாடியதன் மர்மம் என்ன?”
“எமக்கு இரண்டு தாய்மார்கள் உண்டு. குந்தி தேவிக்கு பிறந்தவர்கள் என்னோடு பீமனும், அர்ஜுனனும் மூவர்.மாத்ரிதாய்க்கு பிறந்தவர்கள் நகுலனும், சஹாதேவனும்.குந்திக்கு நானிருக்க மாத்ரிக்கு ஒருவன் வேண்டாமா? தாய்பாசம்தாங்காதல்லவா?”
“அம்பிற் சிறந்த அர்ஜுனன்,வலிமை பீறிடும் பீமன் என உன் சொந்த சகோதரர் இருவர் இருக்க தாய்பாசம் நோக்கி நீநகுலனை எழுப்பியதால் உன் தர்ம சிந்தனை புரிகிறது. சமுதாய சிந்தனையால் கேள்விகளுக்கு பதில் சொன்னதுமட்டுமல்ல குடும்ப சிந்தனையாலும் நீ தர்மம் காப்பவன். இனி நீ தர்மன். உன் அத்தனை சகோதரர்களையும் உயிரோடுதருகிறேன்” என்று மறைந்தது அசரீரி....
மஹாபாரதம் தரும் தர்ம சிந்தனை இன்னும் நம் அத்தனை பேரையும் தர்மர்களாய் இந்த கான்கிரீட் காடுகளில் டீசல்நாகரீக நாட்களில் ஆங்கில மோக ஆதிக்கத்திலும் ஒரு முழுமையான இந்தியனாய் வாழ வைக்கிறது.
முதல் அத்தியாயத்தில், மனித குணத்தின் அத்தியாவசியமாய் ‘தர்மம்’ பார்த்தோம். இனியும் சில குணங்கள்வரவிருக்கின்றன. காத்திருங்கள்.......
( பொறுப்பு துறப்பு : இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் படங்கள் 'கூகுள் இமேஜ்' பகுதியிலிருந்து எடுத்தாளப்பட்டவை)
Comments