என்னை அறிந்தால் -3



நாம் நம்மை எந்த அளவுக்கு  நம்மை அறிந்திருக்கிறோம்?

செத்து மேலே போனான் நம்மாளு ஒருத்தன். தீர்ப்பு கொடுக்கும்போது எமன் கேட்கிறார். “ தம்பி உனக்கு  நரகம்தான்னு தீர்ப்பு சொல்றேன். ஆனா ஒரு ஆப்சன். உனக்கு எந்த நாட்டு நரகம் வேணும்?”

நம்ம பயலுக்கு ஒரே கன்ஃயூசன். என்னடா இது, இப்படி ஒரு ஆப்சனா?

சரி வரிசையாக் காட்டுங்க, நான் செலெக்ட் பண்ணிக்கறேன்னான்.ஏன்னா நாம மொபைல் வாங்கும்போது கூட மூணு,நாலு கடை ஏறி- நாலஞ்சு பிராண்டு பார்த்துட்டுத்தான முடிவு பண்ணுவோம் - கடைசில வீட்ல கேட்டுட்டு!

முதல்ல ஜெர்மன் நரகம் காட்னாங்க.

இங்க என்ன விஷேசம்(?)”ன்னு நம்ம பய கேட்டான்.

மொதல்ல உங்கள எலெக்ட்ரிக் சேர்ல ஒரு மணி நேரம் உக்கார வச்சு , கரண்ட் ஷாக் கொடுப்பாங்க; அப்புறம் ஆணிப்படுக்கையில ஒரு மணி நேரம் படுக்க வச்சிடுவாங்க; அப்புறம் சாயங்காலம் வரை ஒரு ரிடையர்டு சாத்தானை 
வரச் சொல்லி சவுக்கடி கொடுப்பாங்க. அதுக்கப் புறம் நைட் ஃபுல்லா நீங்க ஃப்ரீ

கொஞ்சம் டைட் வொர்க்கா இருக்கும் போல?, இது வேலைக்காவாதுன்னு அடுத்த அமெரிக்கா நரகம் பக்கம் போனான் நம்மாளு. ‘இங்கெப்பிடின்னு ஒரு கொக்கியப் போட்டான்.

மொதல்ல உங்கள எலெக்ட்ரிக் சேர்ல ஒரு மணி நேரம் உக்கார வச்சு , கரண்ட் ஷாக் கொடுத்துட்டு, ஆணிப்படுக்கையில ஒரு மணி நேரம் படுக்க வச்சிட்டு, அப்புறம் சாயங்காலம் வரை ஒரு ரிடையர்டு சாத்தானை வரச் சொல்லி……..” இப்பிடிப் போச்சி போச்சி அவங்க பதில்.
நம்மாளு கடுப்பாயிட்டான், “யோவ் , இதேதான அங்கயும் சொன்னீங்க?”ன்னான்.

கடுப்போட கடுப்பா அப்பிடியே ஆஸ்திரேலியா நரகம், ஜப்பான் நரகம்……எல்லா நரக சுகத்தையும் விசாரிச்சிட்டு வந்தான்.

கிட்டத்தட்ட எல்லா இடத்திலயும் இதே கதைதான்.

சோர்ட்ந்து போயி வரும் வழியில இந்திய நரகம். நம்மூரு ரேஷன் கடை மாதிரி பெரிய கியூ.

நம்மாளுக்கு ஆச்சரியம் ரிபீட் அடிச்சுது.”என்னாடா இது இந்தியாவுக்கு இவ்ளோ கிராக்கி?” ன்னு அவனை அவனே தட்டிக் கொடுத்திட்டு கிட்டப் போயி நைசா மேட்டர் போட்டான்.

சொன்னாங்க, “மொதல்ல உங்கள எலெக்ட்ரிக் சேர்ல ஒரு மணி நேரம் உக்கார வச்சு , கரண்ட் ஷாக் கொடுப்பாங்க; அப்புறம் ஆணிப்படுக்கையில ஒரு மணி நேரம் படுக்க வச்சிடுவாங்க; அப்புறம் சாயங்காலம் வரை ஒரு ரிடையர்டு சாத்தானை வரச் சொல்லி சவுக்கடி கொடுப்பாங்க. அதுக்கப் புறம் நைட் ஃபுல்லா நீங்க ஃப்ரீ” – கிட்டத்தட்ட அதே கதைதான்

மசக் கடுப்பாயிட்டான் நம்மாளு.

கியூவில நின்னுகிட்டு இருந்த ஒருத்தர்கிட்ட கேட்டான், “ லூசாப்பா நீ? அதேதான இங்கையும்என்னய்யா அதிசயத்தை கண்டே, இந்த இந்திய நரகத்தில?”

கியூவில இருந்த ஒரு மொக்கை முனுசாமி சொன்னான், விஷயம் தெரியாம கத்தாதய்யா! வந்து நீயும் இதே வரிசையில நில்லு!”ன்னான்.

நாம டெமோ காட்டாம எந்தப் பொருள் வாங்கியிருக்கோம்?
நரகம் மட்டு விதிவிலக்கா?

விளக்கம் சொல்லு” – ன்னாம் நம்மாளு.

அட, முதல் ஒரு மணி நேரம் எலெக்ட்ரிக் ஷாக் கொடுப்பாங்க இல்லா? மட்டமான மெயின்டனன்ஸ்னால  எலெக்ட்ரிக் சேர் வேலை செய்யாது. அது தப்பித் தவறி வேலை செஞ்சாலும் அப்பப் பார்த்து கரண்ட் இருக்காது……”

சரி , ஆணிப் படுக்கை இருக்கில்ல, இருக்கில்ல?” வடிவேலு மாதிடியே ஆயிட்டான் நம்மாளு இப்ப.

இருக்குய்யா, ஆனா அதுல ஏகப்பட்ட ஆணிங்கள நம்மாளுங்க எப்பவோ ஒண்ணொன்ணா புடிங்காட்டானுங்க……பாதி ஆணி கூட இல்லையாம், நம்மூரு சினிமா தியேட்டரு சீட்டுங்க மாதிரி
சரிதாம்ப்பு, ரிடையர்டு ஆபிஸர் சாத்தான்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க முடியும்? அங்க இருக்கில்ல ஆப்பு?”

சுத்த வெவரம் புரியாத ஆளா இருக்க? அந்தாளு பாட்டுக்கு வந்து கையெழுத்துப் போட்டுட்டு, கேண்டீன் போயிடுவான்….பிரச்சினையே இல்லை. வா, வந்து நில்லு


நாம் எங்கே நிற்கிறோம், தெரிகிறதா?

Comments

Popular Posts