5-5-5


காவிரிக்கரையில் இன்னொரு காசியைப்போல் ( ஆறு – அதன் கரையில் கோயில் மற்று சுடுகாடு என்று ) இருக்கும் ஈரோடு என எனக்கு ஒரு இருமாப்பு எப்போது உண்டு. சமீபத்தில் விருதாசலம் சென்று வந்தபின் அது குறைந்து விட்டது. 23.03.2014 அன்று ஒரு பயிற்சி வகுப்பு. போனதும் முதலில் என்னமோ எனக்கு விஜயகாந்த் ஞாபகம் தான் வந்தது. அவர் நின்று ஜெயித்த முதல் ஊர். ‘காசியில் செத்தா மோட்சம் மறந்தறாதே’ என காசி போகும் மாமாவுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்புவார் நாகேஷ் – அன்பே வா படத்தில். காசியில செத்தாத்தான் மோட்சம் என்பதோடு திருவாரூரில் பிறந்தாலே மோட்சமாம்.( ஆஹா....கலைஞர்...) திருவண்ணாமலையை நினைத்தாலே மோட்சம். சிதம்பரத்தில் வணங்கினால் மோட்சம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்தால் மோட்சம். ( அறிஞர் அண்ணா....) இப்பிறப்பு அறுத்து மோட்சமடைவதே சைவநெறியாம். திருவிளையாடலில் என்ன வேண்டும் எனக்கேட்கும் சிவனிடன் “மீண்டும் பிறவாமை வேண்டும்’ என அவ்வை சொல்வதை நினைவில் கொள்ளலாம். விருதகிரீசுவரர் எழுந்தருளியுள்ள விருதாச்சலத்தில் பிறந்தால் –வாழ்ந்தால்-தரிசித்தால்-நினைத்தால்-இறந்தால்.......எது செய்தாலும் மோட்சமே. கொடுத்து வைத்த விருதாச்சலவாசிகள். கோயிலுக்குள் நுழைந்தால் 2.75 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட கோயில். ஐந்தெழுத்தே சிவன் என்பதாய் இங்கு எல்லமே ஐந்து. சுற்றுபிரகாரம்,மூர்த்தி,கொடிமரம்,கோபுரம்,நதி, உற்சவம், பூஜை, நந்தி..அட மூலவருக்கு ஐந்து பெயர்களாம். இப்படி 25 விதமான சிறப்பு ஐந்துகள்.
வியப்பின் உச்சி ! கோயிலை சுற்றிவர ஒரு மணி நேரமாவது ஆகிறது. ஆழிப்பிரளயத்தாலும் அழிக்கமுடியாத ஆழத்து பிள்ளையார் இங்கே சிறப்பு. சாவதற்குள் ஒருதடவை பார்த்துவிட வேண்டிய திருத்தலங்களுள், இந்தத்தலம் ஒன்று.

Comments

Popular Posts