புது ஜோடி
நல்ல கூட்டமான
கடைவீதில திடீர்னு அவனைக் காணோம்.
கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு,
காணோம்னு புரிஞ்சுகிட்ட அந்தப் பொண்ணு அவனுக்கு போன் பண்ணா.
“ஹலோ, என்னாச்சு?
எங்கிருக்கீங்க?” பதற்றமானாள் அவள்.
“ தங்கம்,
கவலைப்படாதே ......பத்திரமாயிருக்கேன்”
“ அது சரி...நான்
டென்ஷனாயிட்டேன். எங்க இருக்கீங்க சொல்லுங்க...”
“ கல்யாணத்துக்கு
முன்னே நாம அடிக்கடி இதே ஏரியால சுத்துவம்ல...?”
“ஆமா...”
“அப்போ ஒரு நாள்
நீ ஒரு ஜுவெல்லரில காஸ்ட்லியான நெக்லஸ் ஒண்ணை பாத்திட்டு, ஆசைப்பட்டு கேட்டியே
ஞாபகம் இருக்கா?”
பிரகாசமானாள்
அவள், “ அய்யோ ஆமாம்......”
“நான் கூட இப்ப
காசில்ல, கல்யாணம் ஆகட்டும் நிச்சயம் ஒரு நாள் உனக்கு இதை வாங்கி தருவேன்னு
சொன்னேனே....?”
அவளுக்கு
கிட்டத்தட்ட குதித்தே விட்டாள், “ ஆஹா.....ஆமாங்க....சொன்னீங்க”
“ அதுக்கு
பக்கத்து பார்ல இருக்கேன் வந்து பிக்கப் பண்ணிக்க”
Comments