ரா.கி. எனும் ராஜா !

எழுத்தாளர் ரா.கி. அவர்களின்மறைவு யாரோ னம்ம வீட்டில் இறந்ததைப் போன்றதொரு இழப்பைத் தருவதை மறைக்க முடியவில்லை. குமுதம் என்றதுமே இவரது பெயர்தான் நினைவில் வருகிறது. அரசு பதில்களுக்கு அடிமை அத்தனை குமுத வாசகரகளுமேதான் எனில் அந்த அ.ர.சு. வில் 'ர' இவர்தான் என ஐயப் பட்டதும் ( அப்பவே நாஙக அப்படி) அது பூர்த்தியானதில் அடைந்த சந்தோஷங்களுக்கு அளவில்லை.
வித விதமான புனைப் பெயர்களில் ( லைட்ஸ் ஆன் 'வினோத்' என்றும், கிருஷ்ணகுமார் என்றும்....) அவர் எழுதும் போதெல்லம் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு ஃஸ்டைல் இருப்பதை காணத்தவறவில்லை. அரசியலுக்கு ஒரு காமராஜ் எப்படி நிறைய சிஷ்ய பரம்பரை தோற்றுவித்தாரோ, அப்ப்டி எழுத்துலகில் 'சாவி'க்கு அப்புறம் இவர் மாதிரியே எழுத ஆசைப்பட்டவர்கள் ஆயிரம்/. கிட்டத்தட்ட புதியன பயில்வோருக்கு இவர் இன்னுமொரு சுஜாதா! அன்னாரது ஆத்மாமாவுக்கு எழுதுகோலின் சல்யூட். நன்றி - இத்தனைநாள் எங்களுடன் கழித்ததற்கு.

Comments

VGblogs said…
சிறுகதை எழுதுவது எப்படி? ஓர் அற்புதம். ரா.கி. ரங்கராஜன் அவர்களின் புதுமைக்கு 'நான், கிருஷ்ணதேவராயன்' ஒரு சான்று. சரித்திர நாயகர்களைத் தன்னிலையில் வைத்து வேறு எந்தப்புதினமும் எழுதப்பட்டதாய் நான் அறியவில்லை.

Popular Posts